ஆழம்ன்னா என்ன? அது ரொம்ப deep ம்மா!
இந்த வலைப்பூவிர்க்கு முன்பே நீங்கள் வந்திருந்தால் என்னுடைய கடல் நீச்சல் (!?) அனுபவம் பற்றி படித்துருப்பீர்கள். அதன் தொடர்சசியாக இதை கொள்ளலாம்.
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குருவியானது அந்த கிளையை நம்புகிறதா அல்லது தன் பறக்கும் திறமையையா என்று படித்திருக்கிறோம். அது போல் நீந்தும் போது ஆழம் என்னானாலும் நம் நீச்சல் திறமையை நம்பி தான் இறங்குகிறோம். ஒரு வேளை நம் திறமை மீது நமது மனம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால்? இது போன்றது தான் என் நிலைமை. நீண்ட கால இடைவெளி மற்றும் நல்லதல்லாத நினைவுகளை மட்டுமே நினைவில் கொள்ளும் மனம் - deadly காம்பினேஷன். 3 km swimathon, 1.5k in triathlon மற்றும் பல training sessions நீந்தி இருந்தாலும் ஒரு முறை தூரம் சென்று மனம் பதபதைத்து கைகால்கள் விறைத்து போய் ரமணர் போல் மரணத்தை அருகில் சென்று பார்த்த ஒரு அனுபவம் - நிற்க, actually அவ்வளோ scene இல்லை but ரொம்ப பயந்து போய் குப்புற படுத்து நிதானமாக back stroke செய்து ஒரு வழியாக வந்து சேர்ந்த அந்த நினைவு அகளாமல் ஒரு வடுவாக மிஞ்சிவிட்டது. அதனால் ஒவ்வொரு முறை ஆழத்தை (goggles வழியாக) பார்க்கும் போது ஒரு இனம் தெரியாத பயம் என்னை ஆட்டிபடைத்தது.
இரண்டு வாரங்களாக எங்கள் ஓட்ட குழுவினர் நீச்சல் பயிர்சி செய்ய quarry செல்ல எத்தனித்த உடன் இம்முறையாவது பயத்தை ஆட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் சென்றேன். இரண்டு முறையும் நான் ஆளுயர ஆழம் தாண்டி போகவில்லை, நண்பர்கள் ஊக்குவித்தபோதும்.
இன்று நீரில் இறங்கிய உடன் ஒரு முறை மனதை திடப்படுத்துக்கொண்டேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் என்ற இருமாப்பா? சத்தியமாக இல்லை. இம்முறை லாரி tube ஒன்றை வைத்து நண்பர்கள் என் முன் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த tube உள்ளது என்ற நம்பிக்கையில் முதலில் 80 மீட்டர், பின்பு 70, பின் 80 என சிறிது சிறிதாக 800 மீட்டர் நீந்தி முடித்தேன். சோர்ந்து போய்700 மீட்டரில் ஒரு முறை tube பிடித்தேன் தவிர அதன் தேவை ஏற்படவில்லை.
சிந்தித்து பார்த்தால் "தலைக்கு மேலே வெள்ளம் போனா ஜான் என்ன முழம் என்ன?". நீந்தத் தெரிந்தால் ஆறடி ஆனால் என்ன அறுபது ஆனால் என்ன? But மனம் ஒரு குரங்கு. எப்போது எதை யோசிக்க கூடாதோ அப்போது தான் அது யோசிக்கும். இது தவறா என்றால் இல்லை. The mind decides whether you are driving fast or rash; it determines whether you are trying an adventure or a risk!
ஆழம் என்பது நீர்நிலையிலா அல்லது அந்த ஆழத்தை அளக்கும் மனதிலா? ஒரு வேளை அந்த ஆழம் நமக்கு தெரியாமல் இருந்தால் இன்னும் நன்றாக நீந்துவோமா? Tube இருந்தும் பிடிக்காமல் செல்ல முடித்தபோது அது இல்லாமல் போனால் ஏன் பயம்? நிறைய கேள்விகள், பதில் தெரியவில்லை!
Special thanks to Satish ji, Ramachandran and Bharani for helping with getting the tube where I went and ensuring I moved baby steps towards fearless open water swimming!
அருமையான எழுத்து நடை. இல்லை நீந்துதல்.. நானும் உங்க பின்னாலயே வந்த பிரமையை ஏற்படுத்திவிட்டீர்.
ReplyDeleteThis is so witty... hope you have aced swimming by now...
ReplyDelete