ஆழம்ன்னா என்ன? அது ரொம்ப deep ம்மா!
இந்த வலைப்பூவிர்க்கு முன்பே நீங்கள் வந்திருந்தால் என்னுடைய கடல் நீச்சல் (!?) அனுபவம் பற்றி படித்துருப்பீர்கள். அதன் தொடர்சசியாக இதை கொள்ளலாம். மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குருவியானது அந்த கிளையை நம்புகிறதா அல்லது தன் பறக்கும் திறமையையா என்று படித்திருக்கிறோம். அது போல் நீந்தும் போது ஆழம் என்னானாலும் நம் நீச்சல் திறமையை நம்பி தான் இறங்குகிறோம். ஒரு வேளை நம் திறமை மீது நமது மனம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால்? இது போன்றது தான் என் நிலைமை. நீண்ட கால இடைவெளி மற்றும் நல்லதல்லாத நினைவுகளை மட்டுமே நினைவில் கொள்ளும் மனம் - deadly காம்பினேஷன். 3 km swimathon, 1.5k in triathlon மற்றும் பல training sessions நீந்தி இருந்தாலும் ஒரு முறை தூரம் சென்று மனம் பதபதைத்து கைகால்கள் விறைத்து போய் ரமணர் போல் மரணத்தை அருகில் சென்று பார்த்த ஒரு அனுபவம் - நிற்க, actually அவ்வளோ scene இல்லை but ரொம்ப பயந்து போய் குப்புற படுத்து நிதானமாக back stroke செய்து ஒரு வழியாக வந்து சேர்ந்த அந்த நினைவு அகளாமல் ஒரு வடுவாக மிஞ்சிவிட்டது. அதனால் ஒவ்வொரு முறை ஆழத்தை (goggles வழியாக) பார்க்கும் போது ஒரு இனம் தெ...