Posts

Showing posts from June, 2023

காகித ஓடம் கடலலை மீது போவது போலே

மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்ல பழகி விட்டனர். வீட்டை விட்டு கிளம்பும் போது எங்கு செல்ல எத்தனிக்கிறோம் என்று நமக்கு தெரிவதால் பயணம் எளிதாகிறது. சில சமயம் போகும் வழி தெரியாவிட்டாலும் சேருமிடம் அறிந்திருந்தால் யாரிடமாவது கேட்டாவது சென்று அடைகிறோம். அப்படி பழகி விட்டோம். சேருமிடம் தெரியாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டால் அது எப்படி இருக்கும்? அதுவும் சரியான வெளிச்சம் இல்லா ஓர் அடர்ந்த பாதையில்? கண் போன போக்கிலே கால் போகலாமா என்பர், ஆனால் கண் எந்த பக்கமும் பார்க்க இயலாத போது கால் நேரே போக வேண்டும் என்றால் எப்படி? என்னடா சொல்ல நினைக்கிரே, எதுக்கு டா இவ்வளவு முஸ்தீபு என்று எண்ணுகிறீர்களா? நிற்க. இதற்கு முன் நான் பெற்ற அனுபவங்களை இந்த இரண்டு linkகளில் படித்து விட்டு தொடரவும். முதல் அனுபவம் ஆழம் என்றால் என்ன? முருங்கை மரத்தை ஏறி வேதாளத்தை பிடிக்க சென்ற விக்ரமாதித்தன் போல மீண்டும் ஒரு கடல் நீச்சல் முயற்ச்சியை பற்றியது தான் இந்த வலைப்பூ. கமலஹாசன் அன்பே சிவம் படப்பாடலில் கூறியது போல "ஏதாச்சும் போதை ஒண்ணு எப்போதும் தேவை கண்ணா, இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல.." இ...