கடலோரக் கவிதைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்றால் அவ்வைப்ப்பாட்டி. நீந்தியது குளமளவு நீந்தாதது கடலளவு என்பது என் கருத்து.  என்றாவது ஒரு நாள் கடலில் மீன் போல நீந்த வேண்டும் என பலநாட்களாக என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எண்ணம். இதே எண்ணம் எங்கள் ஓட்டக்குழு TTB இல் இன்னும் சிலருக்கும் இருந்தது.  ஒரு நல்ல வாய்ப்புக்காக தேடிக்கொண்டிருந்தோம்.

சூர்யா, parttime TTB and fulltime CTC, இதைப்பற்றி விசாரித்து ஒரு தகவல் சொன்னார். கோவளம் கடற்கரையில் கடல் நீச்சல் பயிற்சி (மேற்ப்பார்வை என்பது சரியான வார்த்தையாக இருக்கும்) சனிக்கிழமைதோரும் காலை 6 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது என சொல்லவே, TTB இல் ஒரு சிறிய குழு அந்த பெருங்கடலில் நீந்தலாமே என ஆர்வம் கொண்டோம். இதை நடத்துபவர்கள் கோகோ கிளப் எனப்படும் ஒரு குழு.

ஒரு ஆர்வத்துடன் இன்று காலை கிளம்பி சென்றோம். நான், சதிஷ், ராமசந்திரன் மேற்கு தாம்பரத்தில் இருந்து; அருண், சூர்யா, சதீஷ், கணேஷ் கிழக்கு தாம்பரத்தில் இருந்துமற்றவர்கள் வர கொஞ்சம் தாமதம் ஆனதால் அது வரை கடலில் விளையாடிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சில பரிச்சயம் ஆன முகங்கள், Ahmed, Hema, Kotte மற்றும் சில புதிய முகங்கள் கூடினர், எங்களை அழைத்தனர்.

அஜித் என்பவர் தான் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உயிர்காப்பான். சில பயிற்சிகள் மற்றும் சில எச்சரிக்கைகளுக்கு பின் கடலில் இறங்கினோம்.   Dive under the wave. அலைகளைக் கடந்தால் ஒரு அழகிய உலகம் காத்திருக்கிறது என்று சொல்லி இருந்தார்கள். It was easier said than done! வேண்டாமே எனச்சொல்வது போல அலைகள் ஒரு உத்வேகத்துடன் எங்களை கரைநோக்கி தள்ளின.  ஒவ்வொரு முறை அலை சுழட்டி அடித்தப்பின் கால்கள் தரையை தேடின. என் உயரத்தை விட அதிகமான ஆழம் என அறிந்த உடன் ஒரு பீதி. ஒருக்கால் தரையில் ஒருக்காலை கூட ஊனமுடியாமல் போனால் இன்னொரு காலுடன் உடலும் சேர்ந்து மீனுணவு (fish food ) ஆகிவிடுவேனோ என எண்ணம் மனதில்.

இரண்டு மூன்று அலைகளை கடந்த பிறகு கூட ஏனோ தொடர்ச்சியாக நீந்தும் எண்ணம் (flow, rather) வரவில்லை, அலைகளின் தொடர்ச்சியான தாக்குதலினாலா அல்லது என்னுள் ஓடிக்கொண்டிருந்த பயத்தினாலா தெரியவில்லை.  சிறிது நேரம் முயற்சிக்கு பிறகு அஜித்தை அனுப்பிவைத்தேன். கவலைப்படாதே சகோதரா நான் ஆழத்திற்கு செல்லமாட்டேன், நீ சென்று மற்றவர்களை கவனி. பின்னர் இரண்டொரு முறை சிறிய அலைகளை உடைக்க முயற்சித்தேன், மார்பளவு ஆழத்தில். பின் கரை வந்துவிட்டேன்.

இன்று கடல் சீற்றம் சற்றே அதிகம் தான் என சொன்னார்கள். இருந்தும், என்னை வாட்டியது சீற்றம் அல்ல, என்னுள் அமர்ந்திருக்கும் பயம். இன்னும் இரண்டு மூன்று முறை சென்றால் கூட இந்த பயம் போகுமா, தெரியவில்லை. ஆனால் இன்றுடன் என் முயற்சியை நிறுத்துவேனா - Not at all. வீழ்வேன் என நினைத்தாயோ என பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவ்ளோ worth இல்லையோ?

இன்று சந்திரயான் முயற்சி சிறுதோல்வி சந்தித்ததில் வருத்தம். Oft repeated statement today - "After a failed attempt to conquer Mount Everest Sir Edmund Hillary remarked, “I will come again and conquer you, because as a mountain you can’t grow, but as a human I can.” ஏனோ என்னை நோக்கி சொன்னது போல உள்ளது! Conquer என்பது பெரிய வார்த்தை but அது என்னுடைய பயத்திற்கு பொருந்தும். As for the sea, the goal is just not to succumb!


பயணங்கள் முடிவதில்லை, நாமாக முடிக்கநினைக்கும் வரை!

Comments

  1. Wow! Super Jagan. Your energy use amazing

    ReplyDelete
  2. Super Jagan. Liked the quotes and how you have used at appropriate places...

    Keep blogging....

    ReplyDelete
  3. அருமை Jegan... நீங்கள் சொல்வது சரியே மலை வளராது.. ஆனால் நாம்... அருமை... அருமை...

    ReplyDelete
  4. Awesome write up...really enjoyed the subtle humor. Those lines of Bharati is something I keep telling to myself too...! It can be very empowering...

    ReplyDelete
  5. Awesome writeup Jagan .. arumai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Big's Backyard Ultra - Oct 4, 2025

Erode Marathon 2025 - Twenty Miler

Hyderabad FM (Food Marathon)